திருமணமாக வேண்டி 100 கி.மீ பாதயாத்திரை செல்லும் இளைஞர்கள்!
கர்நாடக மாநிலத்தில் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல், மணமகள் வேண்டி 4 நாட்கள் பாதயாத்திரை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்குள்ள, மாண்டியா மாவட்டத்தில், 30 வயதான இளைஞர்களுக்கு இன்னு திருமணம் நடக்காததால், விரைவில் விரைவில் நடக்க வேண்டுமென்று ஒரு அமைப்பு உருவாக்கியுள்ளனர்.
இந்த அமைப்பில் இணைந்துள்ள இளைஞர்கள் அனைவரும் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல உள்ளனர்.
இந்த கோவில் மாண்டியா தாலூக்காவில் இருந்து 105 கிமீ தூரத்தில் உள்ளது. இந்த பாத யாத்திரையில் 200 இளைஞர்கள் சேர்ந்து 3 நாட்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இதில், இலவச முன்பதிவு செய்யலாம் என்றும் அனைவருக்கும் 3 நாட்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.