வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (17:11 IST)

15க்கும் மேற்பட்ட சிறுமிகளை சீரழித்த வாலிபர் கைது....

வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை தந்தை அழைப்பதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த காமுகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 
நவிமும்பை, தனே மற்றும் பால்கர் பகுதியில் மர்ம நபர் ஒருவர் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமைகளை தொடர்ந்து செய்து வந்தார். வீட்டில் தனியாக இருக்கும் சிறுமிகளை அவர்களின் தந்தை அழைப்பதாக கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கற்பழித்து வந்தார். கற்பழிக்கப்பட்ட சிறுமிகள் அனைவரும் 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
 
இதனால் பீதியடைந்த அந்த பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மிராரோடு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த மர்ம வாலிபரின் உருவம் பதிவாகியிருந்தது. இதையடுத்து, அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 
 
விசாரணையில் அவரது பெயர் ரெகான் குரோஷி(30) என்பது தெரிய வந்துள்ளது. அவர் மீது கற்பழிப்பு, மானபங்கம் என 15 பாலியல் வன்கொடுமை வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.