Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழித்த மூன்று பேர் : டெல்லியில் தொடரும் சம்பவங்கள்

ஞாயிறு, 12 ஜூன் 2016 (16:42 IST)

Widgets Magazine

டெல்லியில் இளம்பெண் ஒருவரை காரில் கடத்தி மூன்று வாலிபர்கள், அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 


 

 
சமீபகாலமாக, டெல்லி, பெங்களூரு ஆகிய நகரங்களில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது.
 
சம்பவத்தன்று டெல்லி நிஜாமுத்தீன் பகுதியில் ஒரு இளம்பெண், உணவு அருந்துவதற்காக ஒரு ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வாலிபர்கள் காரில் வந்துள்ளனர். 
 
அந்த இளம்பெண்ணிடம் காரில் ஏற சொல்லி வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அந்த பெண் மறுத்துள்ளார். எனவே வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
 
அதன்பின் ஓடும் காரிலேயே அவரை, அந்த மூன்று வாலிபரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின், இரண்டு மணி நேரம் கழித்து, டெல்லி போலீஸ் தலைமையகம் அருகே உள்ள சன்லைட் காலணியில் அவரை இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.
 
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போலீசார், அந்த வாலிபர்களில் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். தலைமறைவாகியுள்ள இன்னொரு வாலிபரை தேடி வருகிறார்கள்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இலங்கைக்கு இந்திய வழங்கிய ஆழ்கடல் ரோந்துக் கப்பல்

ஆழ்கடல் ரோந்துக் கப்பலை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.

news

மாணவர்களின் கல்விக்கடனை அரசே ஏற்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்

மாணவர்களுக்கு வங்கிகள் நெருக்கடி கொடுப்பதால், அவர்களுக்கான கல்விக்கடனை அரசே ஏற்க வேண்டும் ...

news

கொட்டாங்குச்சி எரித்து பவுடராக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே செம்மங்கரையில் தேங்காய் கொட்டாங்குச்சி எரித்து பவுடர் ...

news

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை

இந்திய அளவில், 47 மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு இந்திய சுகாதார ...

Widgets Magazine Widgets Magazine