1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 26 மார்ச் 2025 (16:01 IST)

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

இந்துக்கள்  பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
ஹைதராபாத் மக்களவைத் தொகுதி எம்பி அசாதுத்தீன் ஒவைசி, பாஜகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து, "முஸ்லிம்கள் ஆபத்தில் உள்ளனர்" என்று பேசியிருந்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், "இந்துக்களும் இந்து பாரம்பரியமும் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் தாங்களும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.
 
மேலும், "முஸ்லிம்கள் யாரும் ஆபத்தில் இல்லை; அவர்களின் வாக்கு வாங்கிதான் ஆபத்தில் உள்ளது. இந்திய முஸ்லிம்கள் தங்களின் மூதாதையர்களைப் போல் புரிந்துகொள்ளும் நாளில், இது போன்றவர்கள் தங்களை மூட்டையுடன் வெளியே வர வேண்டிய நிலை ஏற்படும்" என்றும் அவர் கூறினார்.
 
100 இந்து குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியும், அனைத்து மத பழக்க வழக்கங்களையும் பின்பற்ற முடியும். ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் ஒரு இந்து குடும்பம் பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்றால் இல்லை என்பதே முந்தைய உதாரணமாக உள்ளது" என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran