1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

மீண்டும் பெங்களூரு வெள்ளத்தில் மூழ்குமா? மஞ்சள் அலர்ட் விடுத்ததால் பரபரப்பு!

rain
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் வரலாறு காணாத கனமழை பெய்ததால் பெங்களூர் நகரமே மூழ்கியது என்பதும் குறிப்பாக கோடீஸ்வரர்களின் வீடுகளில் கூட வெள்ளம் புகுந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பெங்களூரில் இயல்பு நிலை திரும்பி உள்ள நிலையில் மீண்டும் பெங்களூருவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
கடந்த சில நாட்களாக பெங்களூரில் தினமும் மழை பெய்து வரும் நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு பெங்களூரில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது
 
பெங்களூரு நகரில் 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மீண்டும் பெங்களூரு நகரம் வெள்ளத்தில் மூழ்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
பெங்களூரு நகரின் முக்கிய பகுதிகளான ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி ஆகிய பகுதிகளில் நேற்று கனமழை கொட்டியது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva