1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (19:08 IST)

கந்தஹார் விமான கடத்தல் குறித்து தெரிவிக்கப்பட்டவை தவறானது - யஷ்வந்த் சின்ஹா

கந்தஹார் விமான கடத்தல் குறித்து ‘ரா’ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.தவ்லத் தெரிவித்த கருத்துகள் தவறானது என்று யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
 
மத்திய அரசின் உளவு அமைப்பான ‘ரா’வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.தவ்லத், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி ஒன்றில் 1999ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சியில், இந்திய விமானம் கந்தஹார் நகருக்கு கடத்தப்பட்டபோது, அரசில் முக்கியப் பதவிகளை வகித்தவர்கள் முடிவு எடுக்கத் தயங்கியதாக விமானத்தை மீட்டனர் என்றும் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், தவ்லத்தின் இந்த கருத்தை பாஜக தலைவர்களில் ஒருவரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா மறுத்துள்ளார். தவ்லத்தின் கூறியிருப்பது ஆதாரமற்றது என்றும், கந்தஹார் விமானக் கடத்தலில் அப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப அனைவருடனும் கலந்து ஆலோசித்துத்தான் முடிவு எடுக்கப்பட்டது என்றும் யஷ்வந்த் சின்கா கூறியுள்ளார்.
 
பயணிகளை, பயங்கவாதிகள் பணயக்கைதிகளாக பிடித்து வைத்து இருந்த சூழலில் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்பதால் அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டது என்றும், அப்போது அனைத்துக் கட்சிகளுடனும், குறிப்பாக காங்கிரசுடனும் கலந்து ஆலோசித்த பின்பு தான், தீவிரவாதிகளை விடுவிக்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று சின்கா மேலும் தெரிவித்துள்ளார்.