வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (12:32 IST)

கொரோனா தடுப்பூசிக்கு பதில் வெறிநாய்க்கடி தடுப்பூசி: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

vaccine
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட வந்த ஒருவருக்கு மாற்றி வெறிநாய்க்கடி தடுப்பூசியை மருத்துவமனை ஊழியர் போட்டிருந்தார் 
 
இது குறித்து அறிந்த அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது
 
 தடுப்பூசி போட்டவருக்கு இதுவரை எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்றாலும் கவனக்குறைவாக கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்ட மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது