1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (14:05 IST)

பத்மஸ்ரீ விருது வேண்டாம்: முதல்வரின் சகோதரி நிராகரிப்பு

இந்த ஆண்டு 94 பேர்களுக்கு பத்மஸ்ரீ விருதும், 4 பேர்களுக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேர்களுக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்ட நிலையில் பத்மஸ்ரீ விருதினை பெற்ற பிரபல எழுத்தாளரும் ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் சகோதரியுமான கீதா மேத்தா பத்மஸ்ரீ விருதினை நிராகரித்துள்ளார். 
 
எழுத்தாளர் கீதா மேத்தாவின் சகோதரரும் ஒடிஷா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் அவர்களின் பிஜு ஜனதாதளம் கட்சி கடந்த கடந்த ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணியிலிருந்து விலகியது. இவரை சமாதானப்படுத்தும் நோக்கில் இந்த விருது அறிவிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்த நிலையில் கீதா மேத்தா தனக்கு அளிக்கப்பட்ட விருதை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது
 
இதுகுறித்து கீதா மேத்தா கூறியபோது, 'பத்மஸ்ரீ விருதுக்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டது மிகவும் பெருமையாகவுள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள இந்த நேரத்தில் இந்த விருதை நான் பெறுவது சரியாக இருக்காது. இந்த விருதை பெறுவதால் அரசுக்கும் எனக்கும் இக்கட்டான சூழல் உருவாகும். அதன் காரணமாகவே இந்த விருதை நான் மறுத்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.