1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (15:13 IST)

96 மணி நேரத்தில் உலகின் மிகப் பெரிய புத்தகம் உருவாக்கி கின்னஸ் சாதனை

ஹரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது.
 

 
ஹரியான மாநிலம் ஃபாரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
 

 
96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார்.