வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (09:18 IST)

உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா எழுச்சி பெறும்: நரேந்திர மோடி நம்பிக்கை

உலகப் பொருளாதார சக்தியாக இந்தியா மீண்டும் எழுச்சி பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து ஆங்கிலத் தொலைக்காட்சி ஒள்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “ஒரு காலத்தில் இந்தியா, "தங்கப் பறவை' என்று அழைக்கப்பட்டது. முன்பு இருந்த இடத்தில் இருந்து நாம் சரிந்து விழுந்துவிட்டோம். ஆனால், மீண்டும் எழுச்சிபெறும் வாய்ப்பு தற்போது நமக்குக் கிடைத்துள்ளது.
 
கடந்த ஐந்து அல்லது 10 நூற்றாண்டுகள் தொடர்பான தகவல்களை ஆராய்ந்தால், இந்தியாவும் சீனாவும் சமகாலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது தெரிய வரும்.
 
உலகளாவிய ஒட்டுமொத்த உற்பத்திக்கு இந்த நாடுகளின் பங்களிப்பானது சமமான அளவிலேயே அதிகரித்தது. அதேபோல் சமமான அளவிலேயே சரிந்தது.
 
இன்றைய சகாப்தம் மீண்டும் ஆசியாவுக்குச் சொந்தமானதாக மாறியிருக்கிறது. இந்தியாவும், சீனாவும் தற்போது வேகமாக வளர்ந்து வருகின்றன.
 
உலகப் பொருளாதார சக்தியாக மீண்டும் எழுச்சி பெறும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இந்தியாவின் 125 கோடி மக்களின் தொழில்முனைவுப் பண்பு மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன். அதை நெறிப்படுத்துவதற்கான தெளிவான செயல் திட்டம் என்னிடம் உள்ளது“. இவ்வாறு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.