சகோதரனின் காதலுக்கு உதவிய பெண்ணை நிர்வாண படுத்திய கிராமம்!!


Sugapriya Prakash| Last Modified செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (20:21 IST)
மஹாரஷ்ரா மாநிலத்தில் சகோதரின் காதலுக்கு உதவியதால் பெண்ணை நிர்வாணமாக்கி கிராமத்தை சுற்றி வரவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
இந்த பெண்ணின் சகோதரரும் பக்கத்து கிராம பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். சகோதரரின் காதலுக்கு உதவியாக இந்த பெண் இருந்துள்ளார். இதனை தெரிந்துக்கொண்ட பக்கத்து கிராம பெண்ணின் உறவினர்கள், உதவி செய்த பெண்ணை மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர்.
 
மன்னிப்பு கேட்டும், ஆத்திரம் அடங்காமல் யாரும் இல்லாத சமயம் அந்த உதவி செய்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை செருப்பால் அடித்தும், நிர்வாண படுத்தியும் கிராமத்தை சுற்றி வர வைத்துள்ளனர்.
 
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர சம்பவத்தை செய்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :