Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பெண்கள் சுயநினைவை இழந்த பின் நடக்கும் மர்மம்: காரணம் என்ன??


Sugapriya Prakash| Last Updated: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (18:54 IST)
ஹரியானாவில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்களின் கூந்தல் மர்மான முறையில் வெட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
ஹரியானாவில் மேவாட் பகுதியில் உள்ள கிராமங்களில், குறிப்பாக பெண்களின் கூந்தல், மர்மமான முறையில் துண்டிக்கப்பட்டு வருகிறது. யார் இதை செய்கிறார் என்ற கேள்விக்கு விலை கிடைக்கவில்லை.
 
இதுவரை 15-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது கூந்தல் வெட்டப்பட்டுவிட்டதாக புகார் அளித்துள்ளனர். மேலும், கூந்தல் துண்டிக்கப்படும் நேரத்தில் தாங்கள் சுயநினைவை இழந்து விடுவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். 
 
பெண்களின் கூந்தல் துண்டிக்கப்படுவதற்கு பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்றவை காரணமா என்று கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். யார் இவ்வாறு செய்வது, எதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என போலீசாஸ் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :