திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (19:00 IST)

ஆண்வேடமிட்டு மணமகன் மீது ஆசிட் வீசிய பெண்....அதிர்ச்சி சம்பவம்

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில், ஆண்வேடமிட்டு  மணமகன் மீது ஆசிட் வீசிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

மாநிலம் பஸ்தார் என்ற பகுதியில் உள்ள அமபால் கிராமத்தில் வசிப்பவர் தம்ருதர் பகேல்(20). இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த சுனிதா காஷ்ய்ப் (19) என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மணமகன் அமர்ந்திருந்தனர். அப்போது,அவர்களைச் சுற்றி உற்றார்- உறவினர் சூழ்ந்திருந்தனர்.

மணமேடையின் மீது ஆண் ஒருவர் திடீரென்று மேடையில் ஏறினார். அவரை யாரும் கவனிக்காத நிலையில், தான் கையில் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை மணமகன் மீது வீசிவிட்டு தப்பியோடினார்.

இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் விசாரித்தனர். அதில் ஆசிட் வீசியவர் ஒரு பெண் என்று தெரியவந்த

மேலும், அப்பெண் மணமகனின் முன்னாள் காதலி, இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் பார்த்த பெண்ணை காதலன் திருமணம் செய்ய முடிவெடுத்ததால் அவர் ஆசிட் வீசியது  தெரியவந்துள்ளது.