1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (15:30 IST)

தண்ணீர் டிரம்மில் பெண்ணின் உடல் ...போலீஸார் விசாரணை

andra
ஆந்திர மாநிலத்தில் பூட்டிய வீட்டில் உள்ள டிரம்மில் இருந்து பெண்ணில் உடல் உறுப்புகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உள்ள பிஎம் பாலம் என்ற காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்,  கொம்மாடியில் உள்ள விக்லாங்குளா காலனியில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் உறுப்புகள் பிளாஸ்டிக் கவரில் வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டதாகவும், வாடகைதாரர் பல மாதங்களாக வாடகை தராததால் உரிமையாளர் அங்கு சென்றபோது, இந்த சம்பவம் வெளியே தெரிந்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த வீட்டிற்குள் ஒரு டிரம்மில் துண்டுதுண்டாக  வெட்டப்பட்ட நிலையில், பெண்ணில் உடல் உறுப்புகள் மண்டையோடு கண்டெடுக்கப்பட்டு,ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 Edited By Sinoj