லஞ்சமாக கட்டிப்பிடித்து முத்தம்: போலீஸை மயக்க முயன்ற பெண்!

லஞ்சமாக கட்டிப்பிடித்து முத்தம்: போலீஸை மயக்க முயன்ற பெண்!


Caston| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (17:05 IST)
கொல்கத்தாவில் மது போதையில் கார் ஓட்டி வந்த பெண்ணை தடுத்து அவரிடம் விசாரித்த போலீசுக்கு அந்த பெண் லஞ்சமாக முத்தம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
 
நேற்று முன்தினம் 30 வயதுடைய பெண் ஒருவர் தனது ஆண் நண்பர் ஒருவருடன் பாரில் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியபடியே கார் ஓட்டி வந்துள்ளார். சிங்ரிகட்டா பகுதியில் உள்ள பைபாஸ் சாலையில் இந்த கார் தள்ளாடியபடி வந்து அருகில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியுள்ளது.
 
இதனையடுத்து அருகில் இருந்த கால் டாக்சி டிரைவர் ஒருவர் அவரை காப்பாற்றி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த டிரைவரை தவறாக புரிந்து கொண்ட அந்த பெண் அவரை அடித்துள்ளார். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசுக்கு இது தொடர்பாக தகவல் கொடுக்கப்பட்டது.
 
இதனையடுத்து அந்த கரை மறித்து போலீசார் வழக்கம் போல லைசென்ஸ் இருக்கா, குடித்துவிட்டு கார் ஓட்டுகிறீர்களா, காரை விட்டு இறங்குங்கள் என கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து அந்த பெண் போலீசுக்கு லஞ்சமாக ஒரு போலீசை தன் பக்கம் இழுத்து அவரை கட்டிப்பிடித்து முத்தமாக கொடுத்துக்கொண்டே இருந்துள்ளார்.
 
அந்த பெண்ணின் இறுக்கமான பிடியில் இருந்து அந்த போலீஸ் மீள முடியாமல் திணறியுள்ளார். அவருடன் இருந்த மற்றொரு போலீஸ் அவரை அந்த பெண்ணிடம் இருந்து மீட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணின் மீது மது அருந்திவிட்டு கார் ஓட்டியது மற்றும் தவறாக நடந்து கொண்டது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :