திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:17 IST)

”பலி கேட்ட கனவு?” மூடநம்பிக்கையால் மகளை கொன்ற தாய்!

ராஜஸ்தானில் மூடநம்பிக்கையால் தாயே தன் மகளை பலி கொடுக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரன் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேகா கன்வர் ஹடா என்ற பெண். இவருக்கு நிகேந்திர சிங், சிங்ஹம் என்ற இரண்டு மகன்களும், சஞ்சனா என்ற ஒரு மகளும் உள்ளார்.

சமீபத்தில் மூத்த மகனான நிகேந்திர சிங் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவரது இதயத்தில் கோளாறு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஒருநாள் ரேகா தூங்கிக் கொண்டிருந்தபோது கனவு ஒன்று வந்துள்ளது. அதில் மூத்தமகன் இதயக் கோளாறு சரியாக வேண்டுமென்றால் நரபலி கொடுக்க வேண்டுமென கனவு வந்ததாக ரேகா கூறியுள்ளார்.

இந்த கனவின் காரணமாக பலி கொடுக்க எண்ணிக் கொண்டிருந்த ரேகா தனது கணவர் வெளியே சென்றிருந்த சமயம் தனது இளைய மகன் மற்றும் மகளை கொல்ல முயன்றுள்ளார். அவரது பிடியிலிருந்து தப்பிய இளைய மகன் சிங்ஹம் கத்தி அலறி அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளான்.

அதற்குள் வீட்டை பூட்டிக் கொண்ட ரேகா தனது 12 வயது மகள் சஞ்சனாவை துண்டால் கழுத்தை நெறித்து ஈவு இரக்கமின்றி கொன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ரேகாவை கைது செய்துள்ள போலீஸார் அவரை மனநல காப்பகத்தில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit By Prasanth.K