வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (05:28 IST)

துணை ராணுவ படை தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்

மத்திய அரசின் எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம் செய்யப்படுள்ளார்.
 

 
கடந்த 1980ஆம் ஆண்டில், தமிழகத்திலிருந்து, ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட அர்ச்சனா ராமசுந்தரம், தமிழக போலீசில் பல பதவிகளை வகித்துள்ளார்.
 
இவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைமை இயக்குனராக இருந்த போது, மத்திய அரசு பணிக்காக அர்ச்சனா ராமசுந்தரத்தின் பெயரை கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு அனுப்பியது.
 
இதனையடுத்து, அர்ச்சனா ராமசுந்தரத்தை சிபிஐ கூடுதல் இயக்குனராக கடந்த ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி மத்திய அரசு நியமித்தது.
 
ஆனால், தமிழக அரசு பணியில் இருந்து அர்ச்சனா ராமசுந்தரம் விடுவிக்கப்படாத நிலையில், அவர், சிபிஐ கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றார். இதனால், அவரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு அவரை, சஸ்பெண்ட் செய்தது.
 
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு, கடந்த ஜூன் மாதம் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இயக்குனராக மத்திய அரசு நியமித்தது.
 
இந்நிலையில், மத்திய அரசின் துணை ராணுவ படை பிரிவு, சாஸ்த்ரா சீமா பால் எஸ்எஸ்பியின் தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கு நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை அர்ச்சனா ராமசுந்தரம் பெறுகிறார்.