வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (14:02 IST)

தவறாக நடந்துகொண்ட இளைஞனை கட்டிவைத்து அடித்த பெண் ! வைரல் வீடியோ

தெலங்கான மாநிலம் நல்கொண்டாவில் ஒரு பெண்ணிடம், இளைஞன் ஒருவன் தவறாக நடந்துகொண்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பெண் அந்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
தெலங்கான  மாநிலத்தில் உள்ள நலங்கொண்டாவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இளைஞன் ஒருவன் தவறாக நடந்துகொண்டாகத் தெரிகிறது.  இதுகுறித்து அப்பெண் தன் கணவரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் மறுநாள் அர்ஜாலா வாவி காலனியில் மீண்டும் அப்பெண்னிடம் இளைஞர் தவறாக நடந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர், அவனைக் கட்டிவைத்தார்.பின்னர் ஒரு ஷூவை எடுத்து தனது மனைவியின் கையில் கொடுத்து, அவரை அடிக்கும்படி கேட்டுக்கொண்டார். 
 
அதை தனது செல்போனில் படமும் பிடித்தார்.  அந்தப் பெண், இத்தனை நாட்களாக தன்னிடம் பாலியல் தொல்லை தந்தவனை அடித்து தன் கோபத்தை தணித்துக்கொண்டார். 
இதையடுத்து போலீஸார் வந்து அந்த இளைஞனை காவல்நிலையத்துக்கு கூட்டிச் சென்றனர்.