ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 20 மே 2016 (19:28 IST)

குடிகார கணவன் கண்ணில் ஃபெவிகுயிக்கை ஊற்றிய மனைவி

மது அருந்திவிட்டு தினமும் தனக்கு கொடுமைபடுத்தும் கணவனை பலி வாங்க நினைத்த மனைவியின் செயல் தற்போது விபரீதமாகியுள்ளது.


 

 
மத்திய பிரதேசம் போபால் நகரில் வசிப்பவர் சந்தோஷ் விஷ்வகர்மா. அவருக்கு குடிப்பழக்க உண்டு. இதனால் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியை துன்புறுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
 
குடிப்பழக்கத்தை நிறுத்துச் சொல்லி அவரின் மனைவி பலமுறை மன்றாடியும் பலனில்லை. இதனால் வெறுத்துப் போன அவரின் மனைவி ஒரு சதித் திட்டம் தீட்டினார்.
 
அதன்படி, கடந்த 18ஆம் தேதி இரவு குடித்து விட்டு வந்த சந்தோஷ், வழக்கம்போல் தனது மனைவியுடன் சண்டை போட்டு விட்டு தூங்கிவிட்டார். அதன்பின் அவரது மனைவி ஃபெவிகுயிக்கை அவரது கண்களுக்குள் ஊற்றிவிட்டார். போதையில் இருந்ததால் சந்தோஷிற்கு ஒன்றுமே தெரியவில்லை.
 
ஆனால், அடுத்த நாள் காலை எழுந்த பின் அவரால் கண்களை திறக்க முடியவில்லை. இதுபற்றி மனைவியிடம் கூறியுள்ளார். அப்போது, நடந்த விஷயத்தை கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். 
 
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.