ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2018 (12:15 IST)

5 நாள் கைக்குழந்தையுடன் கணவனின் இறுதி ஊர்வலத்தில் கம்பீரமாய் கலந்து கொண்ட ராணுவ மனைவி

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த கணவரின் இறுதி ஊர்வலத்தில் பிறந்து 5 நாட்களே ஆன கைக்குழந்தையுடன், மனைவி பங்கேற்றது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்திய விமானப்படையின் விங் கமாண்டரான டி.வட்ஸ். இவரது மனைவி குமுத் மோர்கா ராணுவத்தில் மேஜராக பணியாற்றி வந்தார். குமுத் மோர்கா நிறைமாத கர்ப்பினியாக இருந்தார்.
 
இந்நிலையில் கடந்த 15ம் தேதி அசாமில் நடந்த விமானப்படை ஹெலிகாப்டர் விபத்தில் டி.வட்ஸ் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். குமுத் மோர்கா கணவர் இறந்த சில நாட்களில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
 
இதனையடுத்து குமுத் மோர்கா தனது 5 நாள் கைக்குழந்தையுடன், தனது கணவரான டி.வட்ஸ்சின் இறுதி ஊர்வலத்தில் ராணுவ சீருடையில் கனத்த இதயத்துடனும், கம்பீர நடையுடனும் கலந்துகொண்டார். இந்தநிகழ்ச்சி காண்போரை கண்கலங்க வைத்தது. அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.