1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 மே 2020 (15:34 IST)

கணவருக்கு 41… மனைவிக்கு 28… உள்ளே புகுந்த நண்பர் – கொலையில் முடிந்த கள்ளக்காதல் !

புதுச்சேரியில் கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவனை மனைவியே ஆள்வைத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்தவர் 41 வயதாகும் கந்தசாமி. பள்ளி ஒன்றில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.. இவரது மனைவி 28 வயது புவனேஸ்வரி. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே அதிக வயது வித்தியாசம் இருப்பதால் அதைப் பயன்படுத்திக் கொண்டு புவனேஸ்வரியிடம் பழக ஆரம்பித்துள்ளார் கந்தசாமியின் நண்பர் ஸ்ரீதர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் பழக்கம் எல்லை மீறுவதை உணர்ந்த கந்தசாமி மனைவியைக் கண்டித்துள்ளார். மேலும் அதன் பின்னர் எந்த ஆணுடனும் பேசக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரோடு சண்டை போட்டு தாய் வீட்டுக்கே சென்றுவிட்டார். இந்நிலையில் தன் மனைவி மற்றும் நண்பருக்கு இடையிலான கள்ளக்காதல் பற்றி தன் தாயிடம் சொல்லி புலம்பியுள்ளார் கந்தசாமி.

கடந்த மார்ச் மாதம் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கார்மோதி கந்த சாமி இறந்துவிடவே, அவரின் தாய் அளித்த தகவலின் படி போலீஸார் மனைவி புவனேஸ்வரி மற்றும் ஸ்ரீதர் ஆகியோரை விசாரணை செய்துள்ளனர். அப்போது கந்தசாமியின் தொல்லை தாங்க முடியாமல் கள்ளக்காதலன் ஸ்ரீதரிடம் புவனேஸ்வரி கணவரைக் கொலை செய்ய சொல்ல, ஸ்ரீதரோ பிரவீன் குமார் என்பவரின் மூலம் இந்த கொலையை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.