திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (16:29 IST)

லட்டு மட்டுமே கணவருக்கு உணவு.. மனைவியின் விநோத செயல்

உத்தரபிரதேச மாநிலத்தில், மனைவி கணவருக்கு தினமும் உணவாக லட்டு மட்டுமே வழங்கியுள்ளார். ஏன்? என்று பார்ப்போம்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் அவரது மனைவி, கணவர் நன்றாக இருக்க என்ன செய்யவேண்டும் என ஒரு மாந்தீரிகரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த மாந்திரீகவாதி, தினமும்  2 வேளைக்கு 8 லட்டுகள் மட்டுமே சாப்பிட்டு வந்தால் கணவர் நலமாக இருப்பார் என கூறியுள்ளார்.

இதனால் தம்முடைய கணவர் நலமாக இருக்கவேண்டும் என்று கணவருக்கு தினமும் லட்டுகளை மட்டுமே உணவாக கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், தனக்கு மனைவியிடமிருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்ட்டினை அணுகியுள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து கவுன்சிலிங் கொடுத்த அதிகாரி, ”கணவர் மனைவியிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால் அந்த பெண் லட்டு சாப்பிட்டால் மட்டும் தான் தன்னுடைய கணவருக்கு நல்லது என தீர்க்கமாக கூறுகிறார்” என்று கூறியுள்ளார். இந்த செய்தி அப்பகுதியில் பெரும் விநோதமாக பார்க்கப்படுகிறது.