வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (16:46 IST)

ஓய்வு பெற்ற ராணுவ நாய்களை கொலை செய்வது ஏன்..? ஷாக்கிங் பின்னணி

காவல் பிரிவு மற்றும் ராணுவத்தில் நாய்கள் பணியாற்றுகின்றன. நாய்கள் மட்டுமின்றி குதிரைகளும் பணியாற்றுகின்றன. நாய்கள் மற்றும் குதிரைகள் ஓய்வு பெரும் போது கொல்லப்படுகின்றன. இவை ஏன் என தெரிந்துக்கொள்ளுங்கள். 
 
ராணுவ நாய்கள், குதிரைகளும் உடற்தேர்வு குறைப்பாடு அல்லது நோய்வாய்ப்பட்டு போகும் போது, ஓய்வுபெறும் காலத்தை எட்டும். அப்போது அவை வலியற்ற முறையில் கொலை செய்யப்படுகின்றன. 
 
ஒவ்வொரு இராணுவ நாயும் ஏதோ ஒரு சிறப்பு பிரிவில் பயிற்சி பெறுகின்றன. வெடிக்குண்டு கண்டிபிடித்தல், பாதுகாத்தல், விபத்து, காயம் பட்டவரை கண்டறிதல், காலாட்படை ரோந்து, கண்காணிப்பு என பல திறன் வேலைகளில் இராணுவ நாய்கள் பணிபுரிகின்றன.
 
எனவே, பயிற்சி பெற்று அனுபவம் மிக்க நாய்களை அப்படியே வேறு யாருக்கு கொடுக்க முடியாது. தவறானவர்களிடம் நாய் ஒப்படைக்கப்பட்டால், அது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அவை கொல்லப்படுகின்றனவாம். 
 
பாதுகாப்பானவர்கள் கைகளில் நாய்களை ஒப்படைக்க கூடாது? என்றால் நாய்கள் வளர்ந்த விதம், அவை பெற்ற பயிற்சி போன்றவை மிகவும் இரகசியமானவை. எனவே, அவற்றை பொதுமக்கள் கைகளில் அவ்வளவு எளிதாக கொடுத்துவிட முடியாது. எனவேதான் அவை கொல்லப்படுகின்றனவாம்.