வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (08:25 IST)

இந்தியா வெளியிட்ட கொரோனா இறப்பு கணக்கு தவறு: WHO குற்றச்சாட்டு

WHO
இந்தியா வெளியிட்ட கொரோனா வைரஸ் இறப்பு கணக்கு தவறு என உலக சுகாதார மையம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2020 ஜனவரி மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 41 லட்சம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
ஆனால் இந்திய அரசு இந்த காலகட்டங்களில் 4.81 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மட்டுமே பதிவானதாக தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, உலக சுகாதார மையம் வெளியிட்ட கணக்குத் தவறு என்றும் இந்தியாவில் 4.81 லட்சம் உயிர் இழப்புகள் மட்டுமே 2020- 21ஆம் ஆண்டுகளில் பதிவானது என்றும் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையத்தின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது