பாலியல் தொல்லை கொடுத்தவனை போலீஸ் லத்தியால் வெளுத்த பெண் - வைரல் வீடியோ!

Sasikala| Last Modified செவ்வாய், 21 மார்ச் 2017 (10:26 IST)
லக்னோவில் ஒரு பெண் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவனை போலீஸ் லத்தியால் பொது இடத்தில் வைத்து அடித்து  வெளுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 
உத்தரபிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் கவுதம் பாலி என்ற பகுதி உள்ளது. இதன் காவல் நிலையம் அருகே பைக்கில் வந்த  ஒரு கும்பல் அவ்வழியாக சென்ற பெண்களுக்கு கேலி செய்ததோடு, பாலியல் தொல்லை கொடுக்கவும் முயற்சித்தனர். இதனால்  அந்த பெண் மிகுந்த கோபமடைந்தார். இதனையடுத்து போலீசாரருக்கு தகவல் கொடுக்கப்பட்ட்டது.
 
இத்தகவல் அறிந்து அங்கு வந்த போலீசாரின் லத்தியை வாங்கிய அந்த பெண், அந்த கும்பலில் இருந்த ஒருவனை சரமாரியாக  அடித்துள்ளார். போலீசாரும் அதற்கு எதிப்பு தெரிவிக்காமல், அவனுக்கு இதான் சிறந்த பாடமாக இருக்கும் என அமைதியாக இருந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அங்கு கூடி இருந்தவர்களில் ஒருவர் தன்னுடைய  கைப்பேசியில் படம் படித்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :