புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (21:47 IST)

நடிகர் பிரகாஷ் ராஜூக்கு கிடைத்த சின்னம் எது தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னரே மத்திய பெங்களூரு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபத்தில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார். 
 
பாஜக குறித்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சை கருத்துகளை கூறி வரும் பிரகாஷ்ராஜ் தனது சொந்த ஊர் மத்திய பெங்களூரு என்பதால், இந்த தொகுதியை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், பாஜக அரசை வெளியேற்றுவதே தனது லட்சியம் என்றும் வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ்ராஜூக்கு தேர்தல் விசில் சின்னம் கொடுத்துள்ளது. இந்த சின்னம் தனக்கு கிடைத்து இருப்பது பெரிய மகிழ்ச்சி என்றும் இந்த சின்னத்தை விரைவில் மக்களிடம் எடுத்து செல்வேன் என்றும் கூறினார்.
 
மத்திய பெங்களூர் தொகுதியில் தற்போதைய பாஜக எம்பி மோகன் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடும் பிரகாஷ்ராஜூக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 
 
கர்நாடகா மாநிலத்தில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் முதற்கட்டமாக ஏப்ரல் 18அம் தேதியும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.