திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (12:01 IST)

பலாத்காரத்தை தடுக்க முடியாத போது, படுத்து மகிழுங்கள்... காங். எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

காங்கிரஸ் எம்.எல்.ஏ சபாநாயகரின் நிலைமையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாகியுள்ளது. 

 
கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. போது பல்வேறு எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதிகளில் ஏற்பட்ட பயிர் சேத விவரங்கள் குறித்து பேச சபாநாயகரிடம் ஒரே நேரத்தில் நேரம் கேட்டு வலியுறுத்தினர். இதனால் சபாநாயகர் சற்று திணறினார். 
 
அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவும் முன்னாள் சபாநாயகருமான கே.ஆர்.ரமேஷ் குமார், பலாத்காரம் தவிர்க்க முடியாததாக இருக்கும்போது, படுத்து மகிழுங்கள் என்று ஒரு பழமொழி உண்டு. நீங்கள் இருக்கும் நிலையும் அதுதான் என்று சபாநாயகரிடம் கூறினார்.
 
இந்நிலையில் இதற்கு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ சபாநாயகரின் நிலைமையை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும் ஒரு பெண்ணுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையாக மாறியிருக்கிறது.