செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (09:43 IST)

மத்திய அரசின் புதிய சட்டவிதி: நீதிமன்றம் சென்ற வாட்ஸ் அப்!

சமூக வலைதளங்களுக்கு புதிய சட்ட விதியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு இயற்றிய நிலையில் அந்த விதிமுறைகளை கடைபிடிக்க ஒப்புக்கொள்ளும் காலக்கெடு நேற்று முடிவுக்கு வந்தது. இதனை அடுத்து டுவிட்டர், பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இன்று முதல் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது
 
இந்த நிலையில் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் புதிய சட்ட விதிகளை ஏற்றுக் கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி மத்திய அரசின் புதிய சட்ட விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் நிர்வாகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்து உள்ளதாக கூறப்படுகிறது
 
புதிய விதிகள் தனியுரிமை தகவல் பாதுகாப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் இது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.