வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 14 மே 2018 (12:37 IST)

மேற்கு வங்கம்: பஞ்சாயத்து தேர்தலில் வன்முறை

மேற்குவங்கம் மாநிலத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தலில் வெடித்த வன்முறையால் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 
 
மேற்கு வங்க மாநிலத்துக்கு 14.5.18 அன்று பஞ்சாயத்துத் தேர்தல் நடைபெறும் என முன்னதாக அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, இன்று அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் உள்ள வாக்குபதிவு மையங்களில் காலை தேர்தல் தொடங்கியது. இதில் ஆளுங்கட்சியான திரிணாமுல் கட்சியினர் எதிர்கட்சியினரை மனு தாக்கல் செய்யவிடாமல் தடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
 
இது தொடர்பாக அங்குள்ள பர்த்வான், கூக் பெஹர், தெற்கு பர்கானாஸ் ஆகிய பகுதிகளில் வாக்குப்பதிவின்போது பயங்கர கலவரம் வெடித்தது. இதனால் பலர் படுகாயம் அடைந்தனர், தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. மேலும், கூக் பெஹர் பகுதியில் குண்டு வெடித்தது. இதனால் 20 பேர் படுகாயமைடைந்தனர்.
 
அங்கு நடந்துவரும் தேர்தல் வாக்குபதிவிற்காக 12 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையிலும், இப்படி ஒரு கலவரம் நடந்துள்ளது.