1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (12:48 IST)

ஆயுதக்கிடங்கில் நுழைந்து ஏகே 47 துப்பாக்கிகளை கொள்ளையடித்த கும்பல்.. மணிப்பூரில் பரபரப்பு..!

Manipur
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பியதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வன்முறையின் போது திடீரென  பிஷ்னுபூர் என்ற மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஆயுதக் கிடங்கின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மக்கும்பல் அங்கிருந்த ஏகே 47 மற்றும் உயர் ரக துப்பாக்கிகளை கொள்ளையடித்ததாக தெரிகிறது. 
 
மேலும் 19 ஆயிரம் தோட்டாக்களையும் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுவதால் மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva