வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2020 (15:40 IST)

எங்களை டிஸ்மிஸ் செய்தாலும் கவலை இல்லை; கெத்து காட்டும் நாராயணசாமி

நாராயணசாமி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக புதுச்சேரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் “எங்கள் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் எங்களுக்கு கவலை இல்லை” என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது புதுச்சேரி சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் துணை நிலை கவர்னர் கிரண் பேடி, சில நாட்களுக்கு முன்பு முதல்வர் நாராயணசாமிக்கு “சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படக் கூடாது” என கடிதம் எழுதினார். அதனை மீறி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ”மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய எந்த ஒரு சட்டத்தையும் அரசு ஏற்றுக்கொள்ளாது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்கள் ஆட்சியை மத்திய அரசு டிஸ்மிஸ் செய்தாலும் கவலையில்லை, அதனை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என கூறியுள்ளார்.