Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருமணம் ஆன யுவராஜை எச்சரித்த பெண்


Murugan| Last Updated: வியாழன், 1 டிசம்பர் 2016 (17:08 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ், சமீபத்தில் பாலிவுட் நடிகையும், மாடல் அழகியுமான ஹாசல் கீச்சை திருமணம் செய்தார்.

 

 
யுவராஜின் சகோதரர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். அவரிடம் விவாகரத்து பெற்ற ஆகான்ஷா சர்மா, ஒருமுறை பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, தனது மாமியார் தனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்ததார், கணவருடன் தேனிலவுக்கு சென்ற போது கூட, யுவராஜின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்து எங்கள் தனிமையை கெடுத்தார்கள். மேலும், என்னை விரைவில் கர்ப்பம் அடையுமாறு என் மாமியார் என்னை தொடர்ந்து நச்சரித்தார். அதனால், திருமணம் ஆன நான்கே மாதங்களில் என கணவரை விட்டு பிரிந்து விட்டேன் எனக் கூறியிருந்தார். அதன்பின் அவர் 2014ம் ஆண்டு யுவராஜின் சகோதரரை விவாகரத்து செய்து விட்டார்.


 

 
இந்நிலையில், சமீபத்தில் திருமணம் ஆன யுவராஜ், தன்னுடைய திருமணப் புகைப்படம் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த அவரின் முன்னாள் அண்ணி ஆகான்ஷா சர்மா “ மாமியாரின் தலையீடு இல்லாமல் புது தம்பதிகள் தனியாக வாழ பிரார்த்தனை செய்கிறேன். ஹாசல் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர் யுவராஜை திருமனம் செய்து கொண்டார். ஏனெனில், யுவராஜ் மிகவும் நல்லவர். என்னுடைய கணவர் போல் இல்லாமல், அவர் தாயின் தலையீடு இல்லாமல், அவரே அனைத்தையும் முடிவு செய்வார். மேலும், அவர் டெல்லியில் 3 நாட்களுக்கு மேல் தங்க மாட்டார். எனவே எந்த பிரச்சனையும் இருக்காது” என்று கிண்டலடித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :