ராணுவத்தினர் நடத்திய பயிற்சி.. இலக்கு தவறி வீட்டில் விழுந்த வெடிகுண்டால் 3 பேர் பலி..!
இந்திய ராணுவத்தினர் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது இலக்கு தவறி வெடிகுண்டு வீடு ஒன்றில் விழுந்ததை அடுத்து அந்த வீட்டில் உள்ள மூன்று பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற பகுதியில் இராணுவத்தினர் வெடிகுண்டுகளை வெடிக்க வைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் மோர்டார் ஷெல் குண்டுகளை பயன்படுத்தி வந்தபோது திடீரென இலக்கு தவறி அங்கிருந்த வீடு ஒன்றில் வெடித்தது
இதில் அந்த வீட்டில் இருந்த மூன்று பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் இதே போன்ற பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஒருவர் உயர்ந்தார் என்பதும் கடந்த டிசம்பர் மாதம் விறகு பொறுக்க சென்ற 10 பேர் பயிற்சி வெடிகுண்டால் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran