வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 5 ஜூலை 2015 (17:01 IST)

வியாபம் ஊழல் வழக்கில் தொடரும் மர்மம் : மருத்துவக் கல்லூரி டீன் மரணம்

மத்திய பிரதேசத்தில் நடந்த நுழைவுத் தேர்வு ஊழல் விவகாரத்தில் செய்தியாளர், மற்றும் மருத்துவமனை டீன் மர்மான முறையில் மரணமடைந்துள்ளார்.
 

 
மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 
இவ்வழக்கில் முன்னாள் கல்வியமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா உள்பட இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஊழலில் தொடர்புடைய குற்றவாளிகளும், சாட்சிகளும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்த வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊழல் விவகாரத்தில் மீண்டும் 2 மர்ம மரணங்கள் நடந்து உள்ளது.
 
38 வயதான தொலைக்காட்சி செய்தியாளர் அக்‌ஷய் சிங், வியாபம் ஊழல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் பெற்றோர்களை சந்தித்து டெல்லியை சேர்ந்த டி.வி. சேனலில் பணிபுரியும் பேட்டி எடுத்தார். இதனையடுத்து மர்மமான முறையில் விழுந்து மரணமடைந்துள்ளார்.
 
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அருண் சர்மா ஜபல்பூரில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மருத்துவமனையின் டீன் டெல்லியில் உள்ள அருண் சர்மா, இந்திய மருத்துவ கவுன்சிலின் உறுப்பினராக இருந்தார். சர்மாவுக்கு முன் ஜபல்பூர் மருத்துவமனையில் டீனாக பணியாற்றிய மருத்துவர் டி.கே.சாக்கோலை என்ப கடந்த ஓராண்டுக்கும் முன் மரணமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.