1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 ஜூன் 2023 (08:34 IST)

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், கல்வி! – கிரிக்கெட் வீரர் சேவாக்!

ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தங்குமிடம், இலவச கல்வி வழங்க உள்ளதாக கிரிக்கெட் வீரர் சேவாக் அறிவித்துள்ளார்.



ஒடிசாவில் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்தில் 275 பேர் பலியான நிலையில் 900க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உலகத் தலைவர்களும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவ பல அமைப்புகளும் முன் வந்துள்ளன. இந்த ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.

அதேபோல பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் இந்த ரயில் விபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் தங்குமிடம் மற்றும் கல்வியை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவருடைய சேவாக் சர்வதேச பள்ளியில் இந்த குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியும், இலவச கல்வியும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த செயலை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.

Edit by Prasanth.K