ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 மார்ச் 2021 (07:06 IST)

வாக்குச்சாவடிக்கு செல்லாமல் ரிமோட் மூலம் வாக்களிப்பு: தலைமை தேர்தல் ஆணையர்

வாக்குச்சாவடிக்கு செல்லாமல் ரிமோட் மூலம் வீட்டிலிருந்து கொண்டே வாக்களிக்கும் முறை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் இந்தியாவுக்கு வரும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வாக்குச்சாவடிக்கு செல்லாமலேயே வாக்களிக்கும் ரிமோட் வாக்களிப்பு முறை அனேகமாக அடுத்த மக்களவைத் தேர்தலில் அமலுக்கு வரக் கூடும் என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார் 
 
வாக்களிப்பதில் புதிய நடைமுறை அமல்படுத்த தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக சென்னை ஐஐடி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் நிபுணர்களுடன் இதற்காக ஆலோசனைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் இந்த ஆலோசனையின் அடிப்படையில் ஒரு சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் 
 
இதன் முடிவாக முதல் திட்டத்தை அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அறிவிக்க உள்ளதாகவும் வெகு விரைவில் இந்தியாவில் வாக்குச்சாவடிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டே ரிமோட் மூலம் வாக்களிக்கும் முறை வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் இந்த முறை அமலுக்கு வந்தால் நூறு சதவீத வாக்கு சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது