திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 17 நவம்பர் 2017 (13:48 IST)

என் மனைவிக்கு வாக்களிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்; மிரட்டல் விடுத்த பாஜக தலைவர்

உத்தரபிரதேசத்தில் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றால் பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.


 

 
உத்தரபிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். உத்தரபிரதேச உள்ளூர் பாஜக தலைவர் ரஞ்சித் குமார் என்பவரின் மனைவி பாராபங்கி மாவட்டத்தில் போட்டியிடுகிறார். 
 
இதற்கான பிரச்சார கூட்டம் கடநத 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட ரஞ்சித் குமார் பேசியதாவது:-
 
எங்களுக்கு வாக்களியுங்கள் அல்லது பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள். பாஜகவுக்கு வாக்களிக்க உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. எங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.
 
மேலும் இப்படி பேசியது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, நான் முஸ்லீம்களை மிரட்டவில்லை. இந்து மற்றும் முஸ்லீம்களுக்கு இடையே ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வேறுபாடுகள் முடிவுக்கு வர வேண்டும் என முயற்சித்தேன் என்றார்.