வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: புதன், 7 அக்டோபர் 2015 (11:17 IST)

இமாச்சலப்பிரதேச முதல் அமைச்சர் வீரபத்ரசிங் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு

இமாச்சலப்பிரதேச சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதல் அமைச்சர் வீரபத்ர சிங் தவறிவிட்டதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது.

 
இமாச்சலப்பிரதேச முதல் அமைச்சராக இருப்பவர் வீரபத்ரசிங். இவர் மீது பா.ஜ.க. ஊழல் குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ. அதிரடி ஆய்வை மேற்கொண்டது.
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி வீரபத்ரசிங்கின் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்திருந்தது. இந்நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தை அழிக்கவே பா.ஜ.க. தொடர்ந்து புகார் கூறி வருவதாக வீரபத்ரசிங் குற்றஞ்சாட்டி இருந்தார்.
 
இதனிடையே ஹிமாச்சலப் பிரதேத சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்பாதையில் செலுத்த வீரபத்ரசிங் தவறிவிட்டதாக பா.ஜ.க. தலைவர் சன்ட குமார் குற்றஞ்சாட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்," இமாச்சலப்பிரதேசத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முதலீட்டாளர்களை ஈர்க்க வீரபத்ரசிங் தவறிவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.