வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:43 IST)

பிரதமர் மோடி சென்ற இடமெல்லாம் வன்முறை - மம்தா பானர்ஜி விமர்சனம்

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டபேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே 4 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில் 4 கட்ட தேர்தல் உள்ளது. இதனால் அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநில முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தாபானர்ஜி , டம்டம் தொகுதியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி அண்மையில் வங்கதேசம் சென்றார்.அங்கு வன்முறை சம்பவங்கள் நடக்கின்றன.அவர் எங்கு சென்றாலும் இப்படித்தான் நடக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

நான் மிகவும் வெட்கப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். பிரதமர் எல்லை மீறி பேசிவருகிறார். மேலும், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் பாஜகவின் ஏனெடாக செயல்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.