வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (08:18 IST)

விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.1.26 கோடிக்கு ஏலம்.. தொழிலதிபர் வாங்கினாரா?

Lord Vinayagar
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா முடிவடைந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு ரூபாய் 1.26 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில்  விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு நேற்று ஏலம் விடப்பட்டது 
 
இந்த லட்டு ஒரு கோடியை 26 லட்ச ரூபாய்க்கு ஏலம் போய் சாதனை செய்துள்ளது. கடந்த ஆண்டு விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு 65 லட்சத்துக்கு ஏலம் போன நிலையில் கிட்டத்தட்ட இரு மடங்கு இந்த ஆண்டு ஏலம் போய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ந்த லட்டை பிரபல  தொழில் அதிபர் ஏலம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த லட்டை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்றும் ஆரோக்கியம் செல்வ செழிப்பு கிட்டும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்

Edited by Siva