1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:33 IST)

சொதப்பிய விக்ரம் லேண்டர்... சிக்னல் வராது என தகவல்

விக்ரம் லாண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது செய்லபடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. 
 
நிலவின் தென்பகுதியை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் 2,  விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின் போது நிலவிடமிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது தொடர்பை இழந்தது. அதன் பின்னர் தற்போது விகரம் லேண்டரின் நிலை என்னவென தகவ்ல் வெளியாகியது. 
 
ஆம், அதில் விக்ரம் லேண்டர் நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 500 மீட்டர் தள்ளி தரையிறங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அது சற்றே சாய்ந்தபடி நிலவில் இறங்கியுள்ளதாம். மற்றபடி விக்ரம் லேண்டருக்கு எந்த சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அடுத்து விக்ரம் லேண்டரில் இருந்து சிக்னல் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறப்பட்டு வந்த நிலையில், விக்ரம் லேண்டர் மீண்டும் செய்ல்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.