திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (14:13 IST)

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆலோசகராக விஜயகுமார் நியமனம் !

தமிழகம், ஆந்திர மாநிலங்களில் சந்தன மரங்கள் கடத்தி இரு மாநில போலீஸாருக்கு பெரும் தலைவலி கொடுத்து வந்த வீரப்பன் அவரது கூட்டாளிகளை கடந்த 2004 ஆம் ஆண்டு சிறப்புப் படை பிரிவின் தலைவராக செயல்பட்ட விஜய குமார் சுட்டுக் கொன்றார். அவரது தலைமையில் செயல்பட்ட படையை எல்லோரும் பாராட்டினர்.
அதன்பின், அவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசகராக இருந்த கே.விஜயகுமார் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் மற்றும் நக்சல் பாதிப்பு மிக்க மாநிலங்களுக்கான பாதுகாப்பு பிரச்சனையில் அமைச்சகத்துக்கு ஆலோசனை வழங்குவார்.
 
மேலும், கடந்த 3 ஆம் தேதி கே. விஜயகுமார் நியமனம் குறித்த உத்தரவை வெளியிட்டுள்ளது. அவர், இப்பதவியில் ஓராண்டு காலம் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.