வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (19:44 IST)

விஜய் மல்லையாவை இந்திய அரசு தண்டிக்கிறதா? காப்பாற்றுகிறதா?

வங்கிகளிடம் பல கோடி கடன் வாங்கிவிட்டு திரும்ப தராமால், லண்டன் தப்பிய, தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.


 
இதனையடுத்து அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கியது. மேலும், மல்லையா மீதான வெளிநாட்டு பணப்பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த வழக்கிலும் அவர் நேரில் ஆஜராகாவில்லை. மல்லையா அனுப்பிய இமெயில் மட்டும் அவரது வழக்கறிஞர் மூலம் நீதிமன்றம் வந்து சேர்ந்தது.

அதில், அவர் கூறியதாவது, ”நான் இந்தியா வர விரும்புகிறேன். ஆனால், எந்தவித விளக்கமும் கேட்காமல் எனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு திரும்ப முடியாது.“என்றார். இதனையடுத்து, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை, அக்டோபர் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்திய அரசு, விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டால், அவர் எப்படி நீதிமனறத்தில் ஆஜராவார். விஜய் மல்லையா இருக்கும் இடம் தெரிந்தும், அவரை ஏன் இந்தியா கொண்டு வர அரசு தயங்கி வருகிறது. இந்தியா அரசு அவரை தண்டிக்கிறதா அல்லது, அவரை வழக்கில் இருந்து காப்பாற்றுகிறதா? மோடி அரசாங்கம் தான் பதில் கூற வேண்டும்.