வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (13:01 IST)

வைபர் பயன்பாட்டில் அமெரிக்காவை முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா

வைபர் பயன்பாட்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

வைபர் என்ற செயலி தகவல் பரிமாற்றத்திற்கும் மற்றும் பேசுவதற்கு பயன்படுத்தப்பட்டது. இணையத்தள வசதி மூலம் மற்றொரு வைபர் உறுப்பினருக்கு இலவசமாக பேசவும், தகவல்கள் அனுப்பவும் முடியும்.

தற்போது இந்தியாவில் 3.3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. இங்கு 3 கோடி பேர் வைபர் பயன்படுத்துகின்றனர். இதை தொடர்ந்து ரஷ்யா (2.8 கோடி பேர்), பிரேசில் (1.8 கோடி பேர்), லண்டன் (50 லட்சம் பேர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள வைபர் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 46 கோடி.

பயன்பாட்டாளர் எண்ணிக்கையில் மட்டுமின்றி, வருவாய் பெற்றுத்தருவதிலும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியா உள்ளது.  பேஸ்புக் பயன்படுத்துவதிலும் இந்தியா 10 கோடி வாடிக்கையாளர்களுடன் உலக அளவில் 2ம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.