1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (17:32 IST)

”நான் டிவிட் செய்யவில்லை; எனது ஊழியர் தான் செய்தார்” ஜகா வாங்கிய வெங்கையா

திருவள்ளுவர் காவி உடை அணிந்த புகைப்படத்தை பதிவேற்றியவுடனே நீக்கிய நிலையில், அது குறித்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவள்ளுவர் உருவத்திற்கு காவி உடை அணிவித்த புகைப்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனை தொடர்ந்து திருவள்ளுவர் தினமான இன்று, ”இந்தியாவின் துணை குடியரசு தலைவர்” என்ற டிவிட்டர் பக்கத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படம் பகிரப்பட்டது.

இதனை தொடர்ந்து இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அப்பதிவு உடனடியாக நீக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, “முந்தைய திருவள்ளுவர் குறித்தான புகைப்படத்துடனான டிவிட்டை, தவறுதலாக அலுவலக ஊழியர் பதிவேற்றிவிட்டார். பின்பு அது கவனிக்கப்பட்டவுடன் உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது” என தெரிவித்துள்ளார்.