வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2023 (08:03 IST)

உத்தரகாண்ட் சுரங்க விபத்து.. இன்னும் 12 மீட்டர் மட்டுமே.. காலை 8 மணிக்குள் மீட்க தீவிரம்..!

Mining-tunnel
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இன்று காலை 8 மணிக்குள் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் சுரங்கத்தில் 800 மிமீ ராட்சத குழாய் சுரங்கத்தில் 44 மீட்டர் தொலைவுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்றும், இன்னும் 12 மீட்டர் தூரம் மட்டுமே குழாய் செலுத்தப்பட்ட பிறகு  தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர் என்றும், தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் தொடர்ந்து வினியோகம்  செய்யப்பட்டு வருகிறது என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உத்தரகாண்ட்  சுரங்கப்பாதை மண்சரிவில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்களை காப்பாற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஆர்டி ரிக் நிறுவனம் உதவி செய்து வருகிறது.

பாறை, மண் சரிவில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் கிடைக்க தமிழ்நாட்டின் ரிக் தொழில்நுட்பம் தான் உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.11வது நாளாக நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில நிமிடங்களில் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva