புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (08:38 IST)

உத்தர பிரதேசத்தில் 6வது கட்ட தேர்தல்! – யோகி ஆதித்யநாத் வாக்களித்தார்!

உத்தர பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

உத்தரபிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 5 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் 6வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடந்து வருகிறது.

இந்த ஆறாவது கட்ட வாக்குப்பதிவில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதியான கோரக்பூர் உள்ளிட்ட 111 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலையே வாக்குச்சாவடிக்கு சென்று யோகி ஆதித்யநாத் தனது வாக்குகளை செலுத்தியுள்ளார்.