செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (10:15 IST)

மகளிடம் அத்துமீறிய நண்பர்; ஆணுறுப்பை அறுத்த தாய்! – உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

abuse
உத்தர பிரதேசத்தில் தனது மகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆண் நண்பரின் ஆணுறுப்பை பெண் ஒருவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியை சேர்ந்த 36 வயது பெண் கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் கணவரை பிரிந்த அந்த பெண் சில காலம் முன்னதாக பழக்கமான ஆண் நண்பருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய அந்த பெண் தனது ஆண் நண்பர் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதனால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண் ஆத்திரத்தில் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து ஆண் நண்பரின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள அதேசமயம், ஆண் நண்பர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.