வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : திங்கள், 28 ஜூலை 2014 (11:07 IST)

சஹரன்பூர் கலவரம்: நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தினார் ராஜ்நாத் சிங்

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் கலவரம் குறித்து நரேந்திர மோடியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார்.

உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூர் நகரில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே நடந்த பயங்கர மோதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிட நேரம் நீடித்தது.

சஹரன்பூர் கலவரம் குறித்து தான் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருவதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த அனைத்து வித நடவடிக்கைகளையும் எடுக்கும்படி தான் ஏற்கனவே மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம் கூறியதாகவும் பிரதமரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யு.பி.எஸ்.சி.) தேர்வு பாடங்கள் தொடர்பான மாணவர்களின் போராட்டம் குறித்தும் பிரதமரிடம் அவர் எடுத்துரைத்தாகத் தெரிகிறது.

மேலும், இது தொடர்பாக தான் நிதியமைச்சர் அருண் ஜேட்லி,  ஜிதேந்திர சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியதாகவும் அப்போது பிரதமரிடம் ராஜ்நாத்சிங் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.