வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 9 ஜூலை 2014 (17:18 IST)

உத்தர பிரதேச நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி 4 பேர் படுகாயம்

உத்தர பிரதேச மாநிலம் பைசாபாத் மாவட்ட நீதிமன்றத்திற்குள் குண்டு வீச்சுடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டனர் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. சோனு சிங்கின் சகோதரர் மோனு சிங் மீதான வழக்கு விசாரணை இன்று பைசாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இதற்காக பலத்த பாதுகாப்புடன் மோனு சிங் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது உள்ளே புகுந்த மர்ம நபர், திடீரென மோனு சிங் மற்றும் பாதுகாவலர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இந்த எதிர்பாராத தாக்குதலை சமாளிக்க பாதுகாவலர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் துப்பாக்கியால் சுட்டவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

மேலும் 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடந்தபோது நீதிமன்ற வளாகத்திற்குள் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன.

அந்த குண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றி செயலிழக்கச் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.